9741 இலக்கிய வினா-விடைப் பூங்கா.

ச.வே.பஞ்சாட்சரம். யாழ்ப்பாணம்: எஸ்.கணபதிப்பிள்ளை, திறனாய்வு நிலையம், 230, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1988. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம்).

(2), 88 பக்கம், விலை: ரூபா 19.50, அளவு: 21.5×14 சமீ.

பத்தாம் பதினொராம் வகுப்புகளில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாகக் கற்கும் மாணவர்களின் பரீட்சைத் தேவையைக் கருத்திற்கொண்டு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள், நளவெண்பா, பெரியபுராணம், முதலான காவியங்கள், இலக்கியச் சுவை மலிந்த கட்டுரைகள், கதைகள், கவிதைகள் என்பன பற்றிய முன்னறிவை வளர்த்தெடுக்கும் வகையில் யாழ்.இந்துக் கல்லூரித் தமிழ்த்துறை ஆசிரியராகப் பணியாற்றிய பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களால் இந்த வினா-விடைத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85737).

ஏனைய பதிவுகள்

14345 வலு: காலாண்டிதழ் வெள்ளிமலர் 25 சிறப்பிதழ்.

க.தர்மசேகரம் (பிரதம ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கருவி: மாற்றுத் திறனாளிகளின் சமூக வள நிலையம், இல. 1166/15, அருளம்பலம் ஒழுங்கை, நல்லூர் வடக்கு, 1வது பதிப்பு, மார்ச் 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம்,