9748 கதாபாத்திரங்களின் குணப்பண்புகள்: க.பொ.த. சாதாரண தரம்.

சு.இந்திரராசா. கோப்பாய்: சு.இந்திரராசா, சமூகக் கலை மன்ற வெளியீடு,  1வது பதிப்பு, ஓகஸ்ட் 1971. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ காந்தா அச்சகம்).

ix, 88 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 19×12.5 சமீ.

சங்க இலக்கிய கதாபாத்திரங்களின் குணப்பண்புகளை விளக்கி எழுதக் கோருவது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழிலக்கிய பாடத்தில் ஓர் வினாவாகும். இந்நூலில் குணப்பண்புகள் என்றால் என்ன என்பதை விளக்கி, தருமர், கர்ணன், திருதராட்டிரன், துரியோதனன், வீமன், அருச்சுனன், திரௌபதி, கைகேயி, இராமன், வசிட்டன், தசரதன், மந்தரை ஆகிய கதாபாத்திரங்களின் குணாம்சங்களை 12 கட்டுரைகளில்  மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான நடையில் விளக்கியுள்ளார். இவற்றுக்கு ஆதார நூல்களாக ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையின்  பாரதச்சுருக்கம், கம்பராமாயணத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலம், கைகேயி சூழ்வினைப் படலம் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளார். ஆசிரியர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87014).                                                

ஏனைய பதிவுகள்

11447 சுதேச மருத்துவ மூலிகைக் கையகராதி: மூலிகை அரும்பத அகராதி.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், கைதடி, 1வது பதிப்பு, மே 1997. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). xiv, 148 பக்கம், விலை: ரூபா 87.50, அளவு: 14.5×11.5