9759 தமிழ் இலக்கிய அமைப்புக் கட்டுரைகள்.

செ.கதிர்காமத்தம்பி. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

86 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21.5×14 சமீ.

நூலாசிரியர் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். இந்நூலில் க.பொ.த. சாதாரண தர வகுப்பு மாணவர்களின் பயன்பாட்டிற்கென ஆசிரியரால் எழுதப்பட்ட 17 மாதிரிக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கம்பராமாணக் காட்சிகள், நளவெண்பா, இஸ்லாமிய கலையும் பண்பும், நாலடியார், மாதரும் மலர்ப் பொய்கையும், ஆசாரக் கோவை, சிரிக்கத் தெரிந்த பாரசீகர், பெரியபுராணம், கர்ணனும் கும்பகர்ணனும், இலங்கை வளம், கலையின் விளக்கம், சீறாப் புராணம், நீதிக்குப்பின் பாசம், கங்கையில் விடுத்த ஓலை, ஒன்றுக்கு ஆயிரம் ஆயிரம், செய்னம்பு நாச்சியார் மான்மியம், நன்றிப் பெருக்கு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

16950 அன்புள்ள ஆரியசிங்க.

செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xlii, 146 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ.,