9804 செங்கை ஆழியான் நாவல்கள்: ஒரு திறனாய்வு நோக்கு.

கந்தையா முருகதாசன். யாழ்ப்பாணம்: இலங்கை இலக்கியப் பேரவை வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. ( அச்சக விபரம் தரப்படவில்லை).

182 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ.

இவ்வாய்வில் 1960-2003 காலப்பகுதிக்குரிய செங்கை ஆழியானின் நாவல்கள் ஆய்வுக்கெடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. செங்கை ஆழியானின் ஆளுமை உருவாக்கம் (இலக்கியமும் படைப்பாளியும், வாழ்வும் எழுத்தும், கல்லூரிக்காலம், பல்கலைக்கழகச் சூழல், செங்கை ஆழியானின் படைப்புக்கள்), செங்கை ஆழியானின் நாவல்களில் பொருளாதாரப் பிரச்சினைகள் (அறிமுகம், வர்க்கங்களின் தோற்றமும் வறுமையும், செங்கை ஆழியான் நாவல்களில் வறுமை, சீதனம், சுரண்டலும் சமூக ஊழல்களும்), செங்கை ஆழியான் நாவல்களில் சாதியம் (அறிமுகம், ஈழத்தில் சாதியம் தொடர்பான நாவல்கள், செங்கை ஆழியானின் நாவல்களில் சாதியம்), செங்கை ஆழியான் நாவல்களில் புலப்பெயர்வு சார் சிக்கல்கள் (புலம்பெயர்வு), செங்கை ஆழியானின் வரலாற்று நாவல்கள் (வரலாறு என்றால் என்ன, வரலாற்று நாவல்கள், தமிழில் வரலாற்று நாவல்கள், ஈழத்தில் வரலாற்று நாவல்கள், செங்கை ஆழியானின் வரலாற்று நாவல்கள்), செங்கை ஆழியான் நாவல்களில் படைப்பாளுமை (கதை மாந்தர் படைப்பு), நிறைவுரை ஆகியஆறு இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  2005இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட எம்.பில் தேர்வுக்கானஆய்வு இதுவாகும்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 192958).

ஏனைய பதிவுகள்

Cellular Slots In the 2021

Posts Reels Out of Chance Rtp and you will Volatility Inside the Mega Moolah Slot Enjoy Cellular Casino For real Money The five Better Cellular

11302 ஜனநாயகமும் மனித உரிமைகளும்: கட்டுரைத் தொகுப்பு.

வி.ரி.தமிழ்மாறன். கொழும்பு 8: மதுரி மலர்வகம், பூங்கா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 200 பக்கம், விலை: ரூபா 400., அளவு:

Massachusetts Sports Betting

Content What Is The Minimum And Maximum Stake For A Mobile Bet In Sports?: Queen of the Nile Download $1 deposit Live: Bets On Sports