9813 நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம்.

கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 600002: மக்கள் வெளியீடு, 49, உனிசு அலி சாகிப் தெரு, எல்லிசு சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (சென்னை 600005: தேவா ஆப்செட்).

216 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ.

பேராசிரியரின் பல்வேறு படைப்பாக்கங்களுள் தேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பாயமைந்த இந்நூலில், தமிழில் நவீன இலக்கியம் என்ற பொதுத் தலைப்புக்குள் வரக்கூடியதாக அவரால் எழுதப்பெற்ற  ஒன்பது கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நவீன தமிழிலக்கியத்தின் சமூகப் பின்புலம்: ஒரு இலக்கிய வரலாற்றுச் சுருக்கம், பாரதியின் மகாவித்துவச் சாதனை: தமிழிலக்கியப் பரப்பிற் பாரதி பெறும் முக்கியத்துவம் பற்றிய ஒரு குறிப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள்: விரிவான ஆய்வுக்கான முன் குறிப்புகள் சில, நவீன தமிழிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி: வரன்முறையான மதிப்பீட்டின் அத்தியாவசியம், தமிழிலக்கியத்தின் நவீன காலம் இன்னும் தொடர்கிறதா?, தமிழில் பின்நவீனத்துவம் பற்றிப் பேசப்படுவதன் முன்: தமிழில் நவீனத்துவம் குறிக்கும் தொகுநிலை அர்த்தங்கள் பற்றிய ஒரு ஒப்புநோக்குக் குறிப்பு, அண்மைக்காலத்து மேனாட்டு இலக்கிய விமர்சனம்: ஓர் அறிமுகக் குறிப்பு, மார்க்சியமும் இலக்கிய விமர்சனச் சமகாலச் செல்நெறியும், பின்னவீனத்துவம்: அதன் சிந்தனைப் பின்புலம், கலை, இலக்கிய, அரசியற் பரிமாணங்கள் ஆகியன பற்றிய ஒரு அறிமுக விமர்சிப்பு ஆகிய ஒன்பது கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Obtain Moolah

Blogs The new fixed Payment Betting Strategy Within the Super Moolah A real income Against Free Games Super Moolah Slot Game Incentives In a position