9838 எட்டாந்தரச் சரித்திரச் சுருக்கம்.

இ.தர்மலிங்கம். சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1970. (சுன்னாகம் : திருமகள் அழுத்தகம்).

viii, 216 பக்கம், புகைப்படம், வரைபடம், விலை: ரூபா 3.75, அளவு: 21×13.5 சமீ.

புதிய பாடத்திட்டத்திற்கும், சரித்திரம் கற்பித்தற்குரிய வழிகாட்டிக்கும் அமைவாக எழுதப்பெற்ற நூல். இந்நூல் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை, 1817-1818 ஆங்கிலேயரின் ஆதிக்கமும் உள்நாட்டுக் கலகங்களும், 1818-1850 வரை (கோல்புருக் சீர்திருத்தம், 1848ஆம் ஆண்டுக் கலகம்), இலங்கையும் உலகமும் (கைத்தொழிற் புரட்சி), இலங்கையும் உலகமும் (பிரான்சு-பிரான்சிய அரசியற் புரட்சியும் ஐரோப்பிய  யுத்தங்களும்), எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, போக்குவரவும், தபால் தந்தி முறைகளும், கல்வி கலாசார முன்னேற்றம், நவீன ஐரோப்பா, ஐரோப்பாவின் விரிவு, சீனா யப்பான் உன்னத நிலையை அடைதல், ஐக்கிய அமெரிக்க நாடுகள் உன்னத நிலையை அடைதலும் அவற்றின் ஆதிக்கம் பரவுதலும், இலங்கையின் அரசியல் வளர்ச்சி, இலங்கையும் உலகமும், முதலாம் உலக மகா யுத்தத்தின் பின் ஐரோப்பா, இரண்டாவது உலக மகா யுத்தம், பிரித்தானியப் பொதுநல அரசு ஆகிய 17 அலகுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த இ.தர்மலிங்கம், சரித்திர கதா வாசகம், இலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும், சரித்திரச் சுருக்கம் எi-எii, இலங்கைச் சரித்திர வினா-விடை, உலக சரித்திர வினாவிடை, குடிமையியல் 6-8, முதலிய நூல்களின் ஆசிரியராவார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104661).

ஏனைய பதிவுகள்

Tragamonedas Sobre Frutas

Content Especialidades De los Juegos Sobre Casino Online Sin cargo: información adicional Juguetear A Treasures Of Troy Tragamonedas Sin cargo Tras una concesión del permiso,