9907 அந்தனி ஜீவாவின் அரைநூற்றாண்டு அனுபவங்கள்: ஒரு வானம்பாடியின் கதை. அந்தனி ஜீவா.

யாழ்ப்பாணம்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்).

xii, 92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-16-9.

35ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ள நூல். ஜீவநதி சஞ்சிகையில் 20 மாதங்கள் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. ஆசிரியரின் 70ஆவது அகவையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்நூலில் அந்தனி ஜீவா துணிச்சலுடன் பல கருத்துக்களை முன்வைக்கின்றார். அனைத்தும் தன் வாழ்வனுபவங்களினூடாகக் கண்டுகொள்ளப்பட்டவை. மலையக இலக்கியம், மலையக வாழ்வு என்பவற்றுடன் நில்லாது, ஈழத்து இலக்கியம், ஈழத்து நாடகங்கள், சிற்றிதழ்கள், இலக்கிய விழாக்கள், இலக்கியகர்த்தாக்கள், இருட்டடிப்புக்கள் என ஒரு விரிந்த பரப்பினுள் இவரது பதிவுகள் காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

11951 இலங்கை: இது பகைமறப்பு காலம் (சிராஜ் மஷ்ஹூருடன் ஒரு நேர்காணல்).

சிராஜ் மஷ்ஹ_ர். அக்கரைப்பற்று: சமூக அரசியல் படிப்பகம், 117, நகரப் பள்ளிவாசல் வீதி, அக்கரைப்பற்று, 1வது பதிப்பு, மார்ச் 2017. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ்). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.