சிதம்பரபத்தினி (இயற்பெயர்: பத்தினியம்மா திலகநாயகம் போல்). யாழ்ப்பாணம்: திருமதி. பத்தினியம்மா திலகநாயகம் போல், மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை வீதி, வண்.வடமேற்கு, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ்).
x, 220 பக்கம், தகடுகள், விலை: ரூபா 600., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-54502-2-8.
நூலாசிரியர் பத்தினியம்மா திலகநாயகம் போல் நாவல்-சிறுகதையாசிரியராகவும், கவிஞராகவும், கட்டுரையாசிரியராகவும் ஊடகங்கள் வாயிலாக அறியப்பெற்றவர். சமூக சேவை உதவி ஆணையாளராக, சிறுவர் நன்னடத்தை உதவி ஆணையாளராக, வட கிழக்கு கல்வி பிரதிச் செயலாளராக, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எனப் பல்வேறு பதவிகளையும் வகித்தவர். இந்நூல் இவரது வாழ்க்கைச் சரிதையாகும். கதைவழி வாழ்க்கை வரலாற்று நூலாக அமைந்துள்ள இச் சுயசரிதை பற்றிய அணிந்துரையில், யாழ். பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி, பேராசிரியர் வி.பி.சிவநாதன் “எல்லாவற்றுக்கும் மேலாய் இணை பிரியாதவர்களாக இருப்போம் என்ற உணர்ச்சிச் சபதம், கணவனை இழந்தபோது பரிதவிக்கும் உள்ளமாக -நானோ இதற்கு நாயகமே- என்ற இந்நூல் அமைந்துவிட்டது. இது ஒரு புதிய நாவல் வடிவமாக கதைகூறும் இலக்கியமாகிவிட்டது” என்று குறிப்பிடுகின்றார். பெண்கள் தமது பாதுகாப்பையும் வளர்ச்சியையும் மற்றவர்களின் பொறுப்பில் விடாமல் தாமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்ற நெறியை இவரது வாழ்வின் படிப்பினையாக இந்நூல் புகட்டுகின்றது.