குரும்பசிட்டி சன்மார்க்க சபை. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்,3 வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1962, 2வது பதிப்பு, 1962. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
vii, (2), 120 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 1.25, அளவு: 18.5×12.5 சமீ.
அரசினரால் வெளியிடப்பட்ட சைவசமய பாடத்திட்டத்திற்கேற்ப குரும்பசிட்டி சன்மார்க்க சபையினரால் எழுதப்பட்ட சைவசமய போதினி வரிசையில் இது ஆறாவது வகுப்பிற்குரிய நூல். ஓவியர் கே.கே.வீ.செல்லையாவினால் வரையப்பட்ட விளக்கச் சித்திரங்களையும் உள்ளடக்கியது. நான்கு பகுதிகளைக்கொண்ட இந்நூலின் முதற்பகுதியில் இளையான்குடிமாற நாயனார், பூசலார் நாயனார், கண்ணப்ப நாயனனார் 1-2, தண்டியடிகள் நாயனார், திலகவதியார், சிவபெருமான் சோதிப் பிழம்பானமை, மார்க்கண்டேயர், செல்வச்சந்நிதி, அமிர்தகழி-மாமாங்கேஸ்வரர் ஆலயம் ஆகிய தலைப்புகளிலும், 2ம் பகுதியில் கோவிற்கிரியைகள் என்ற தலைப்பிலும், 3ம் பகுதியில் திருஞான சம்பந்தசுவாமிகள் தேவாரம், திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம், பெரிய புராணம், கந்தபுராணம், திருப்புகழ், பட்டினத்தார் பாடல் ஆகிய தலைப்புகளிலும், நான்காம் பகுதியில் நன்னெறியும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87285).