8162 நல்லை நகர்ச் செவ்வேள்: வானொலி வர்ணனை.

செ.தனபாலசிங்கன். யாழ்ப்பாணம்: செ.தனபாலசிங்கன், 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).

xxx, 98 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 18.5×12.5 சமீ.

இலங்கை வானொலி, யாழ்ப்பாணத்தில் நல்லூர்க் கோவில் திருவிழாக் காலங்களில் நிகழ்வுகளை நேர்முக வர்ணனையாகப் பதிவுசெய்து வானொலியில் ஒலிபரப்பவது வழக்கம். இப்பணியை நீண்ட காலமாகச் செவ்வனே செய்துவந்தவர் இந்நூலாசிரியர் செ.தனபாலசிங்கன். தான் மேற்கொண்ட வர்ணனைகளை இந்நூலில் சிறு கட்டுரைவடிவில் நினைவுப் பதிதைகளாகப் பதிவுசெய்துள்ளார். தேர்த்திருவிழா வர்ணனை ஆரம்பம், ஆக்கம் தரும் அழிவு, தேரின் பொருள், ஊன நடனம், தேரின் தத்துவம், சறுக்குக் கட்டை, தேரின் கீழ் அண்டம், தேரின் பீடம், தேரின் நான்காம் தட்டு, தேரின் கலசம், தேரின் குடை, ஆறுமுக தத்துவம், ஒளிதரும் முகம், அருளும் முகம், வேள்விகாக்கும் முகம், மெய்ஞ்ஞானத் திருமுகம், வீரத் திருமுகம், இன்ப முகம், ஆறுமுகமான பொருள், காலைப் பிடித்தால் கைமேல் அருள், ஆடிவரும் முருகன், வடம்பிடிக்க வாருங்கள், காவடி ஆட்டம், அர்ச்சனை செய்தல், தேங்காய் உடைத்தல், பச்சை சாத்துதல், முருகன் அழகு, நல்லைநகர்ஆறுமுகப் பெருமான், நல்லைநகர்  முத்துக்குமாரன், நல்லைநகர்ப் பழநி ஆண்டவன், நல்லைநகர் வேற்பெருமான், நல்லைநகரில் ஒரு பிள்ளையார், நல்லைநகரில் நாம் காணும் முருகன், நல்லூரில் நாவலரின் புராண படனம், நல்லைப்பதியில் ஒரு கலியுக வரதன், அடியார் பரவசம், முருகனின் அருட்காப்பு, முருகா வருக வருக, வாராதிருக்க வழக்கு உண்டோ, நல்லூரில் தித்திக்கும் அமுது, அடியார் நடுவுள் இருக்கும்அருள், நல்லைநகர்ச் செவ்வேளின் பெருங்கொடை, நல்லூர்த் திருவிழாக் காட்சி நிறைவு, தீர்த்தோற்சவ வர்ணனை, முருகனின் சக்திகள், பஞ்சகிருத்தியத்தில் அருளல், விநாயகர் எழுந்தருளல், அஸ்திரதேவர் வருகை, பரமானந்த சாகரம், சண்முக தீர்த்தம், அடியார்களின் பக்திப் பரவசம்,  பஞ்சமூர்த்திகள் தீர்த்தம் ஆடல், விழாக்களின் உட்பொருள், கிரியைகளுக்கு ஒரு விளக்கம், வாழ்த்து ஆகிய தலைப்புகளில் அமைந்த கட்டுரைகளுடன் கி.வா.ஜகந்நாதன் வழங்கிய துதிப்பாடல்களும் பின்னிணைப்பாகச் சேர்த்துள்ளார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  118696).

ஏனைய பதிவுகள்

Ruleta Online Casino Online Platinum

Content Casino William Hill Sin bonificación de depósito – Bonos VIP Juegos sobre Blackjack ¿Existen los bonos desprovisto depósito en De cualquier parte del mundo?

Beste Echtgeld Casinos 2024

Content Sind Casino Spiele Mit Echtgeld In Deutschland Legal? | Swish Casino -Bonus How To Choose The Best Online Casino Bonus Best Online Casinos In