பத்மா சோமகாந்தன். கொழும்பு 4: சின்மயா மிஷன், இலங்கை (Chinmaya Mission of Sri Lanka), 21/1B, De Kretser Place, 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
91 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 22×14 சமீ.
மனிதன் வானரத்தின் பரிணாம வளர்ச்சியே என்பது அறிஞர் முடிபு. பேராற்றல் கொண்டு விளங்கிய அனுமன் வானரமாகப் பிறந்து தனது அர்ப்பணிப்பான தொண்டுகளால் உயர்ந்து, தெய்வ நிலையில் வைத்துப் போற்றப்படுகிறார். அனுமனின் கதையையும் சாதனைகளையும் சிறார்கள் அறியும் வகையில் தினகரன் வாரமஞ்சரியில் 40 வாரங்கள் தொடர்கதையாக எழுதியவர் பத்மா சோமகாந்தன். அத்தொடர் ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமான் ஆலய மகா கும்பாபிஷேக தினத்தன்று வெளியிடப்பட்டுள்ளது . கம்பராமாயணத்தின் பின்னணியில் அனுமானின் வரலாறு இங்கு பேசப்படுகின்றது.