8173 புலோலி பசுபதீஸ்வரர் பதிற்றுப் பத்தந்தாதி.

ந.பத்மாசனி அம்மாள் (மூலம்), மனோன்மணி சண்முகதாஸ் (உரை விளக்கம்). பருத்தித்துறை: அ.சோமசுந்தரம்பிள்ளை, பட்டயக் கணக்காளர், புலோலி மேற்கு, 3வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1925, 2வது பதிப்பு, 1997. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

xviii, 100 பக்கம், விலை:  ரூபா 150., அளவு: 24×18 சமீ.

புலோலி பசுபதீஸ்வரர் ஆலயம்18ம் நூற்றாண்டின் பிற்கூற்றில் தென்னிந்தியாவிலிருந்து வந்தவராகக் கருதப்படும் ஒரு சுவாமியார் தான்  கொண்டுவந்த பிள்ளையார், வீரபத்திரர் விக்கிரகங்களை புலோலியில் கொன்றை மரமொன்றின் கீழ் பிரதிஷ்டைசெய்து வழிபடத் தொடங்கினார். இதுவே புலோலி பசுபதீஸ்வரர் ஆலயத் தோற்ற வரலாறு. பின்னாளில் ஆறுமுக நாவலரால் திருவூஞ்சல் பாடப்பெற்ற திருத்தலமாக இது வளர்ந்தது. மதுரைத் தமிழ்ப் பண்டிதை  புலோலியூர் ந.பத்மாசனி அம்மாள் (திருமதி பத்மாசினி இராசேந்திரம்) அவர்கள் 1925இல் மேற்படி கோவில்மீது பாடிய அந்தாதியே இதுவாகும். மூன்றாவது பதிப்பாக வெளிவரும் இவ்வந்தாதி கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் சொற்பொருள் விளக்கவுரை, சிறப்புநிலைக் குறிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்