8186 விநாயக மகத்துவம்.

க.ப.சின்னராசா, அநு.வை.நாகராஜன். தெல்லிப்பழை: பாலர் ஞானோதய சபை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1987. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).

xxiii, 36 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 21.5×14 சமீ.

மிருதங்க வித்துவான் கே.பீ.சின்னராசாவும், சைவப் புலவர் அநு.வை. நாகராஜனும் இணைந்து எழுதிய நூல் இது. கணேசமூர்த்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் காணபத்தியம் என்ற மார்க்கம், அகச் சமயங்கள் ஆறினுள் ஒன்றாகும். இந்நூல் விநாயகரின் மகத்துவம் பற்றி விரிவாக விளக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  77239).

ஏனைய பதிவுகள்

13289 பெண்மையின் பக்கங்கள் (கருத்துத் தொகுப்பு).

உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஆவணி 2013. (யாழ்ப்பாணம்;: ஷாம்பவி பதிப்பகம்;). x, 138 பக்கம், விலை: