8705 ஈழத் தமிழ்ச் சூழலில் நவீனமயவாக்கமும் இலக்கியத்தினூடான அதன் வெளிப்பாடுகளும்.

செ.யோகராசா. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப்  பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).

(4), 23 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

ஈழத்துத் தமிழ்ச் சூழலில் நவீனமயவாக்கம் நிகழ்ந்த வேளையில் ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் ஊடான அது சார்ந்த வெளிப்பாடுகளும் அவ்விதத்தில் அவை பெறுகின்ற முக்கியத்துவமும் எவ்வாறு நன்கு புலப்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பான விரிவான ஆய்வு. அத்தகைய சமகால இலக்கியங்களுள் கவிதையின் ஒரு கூறான பாடல்கள் முதன்மை பெற்றிருப்பதும் கவிஞர்கள், கும்மி வடிவங்கள், ஜனரஞ்சக மெட்டுக்கள், மேடைப்பாடல்கள், நாடகப் பாடல்கள், கூத்துப் பாடல்கள் ஆகியவற்றை உணர்வுபூர்வமாக பயன்படுத்தியதனூடாக கற்றோரிடம் மட்டுமன்றி பாமர மக்கள் மத்தியிலும் நவீனமயவாக்கத்தின் வெளிப்பாடுகள் பரவியிருக்கும் என்பதையும்  இவ்வாய்வு தெளிவுபடுத்துகின்றது. இவ்வுரை 1911ம் ஆண்டுக்கான சீமாட்டி லீலாவதி இராமநாதன் (செல்வி ஆர்.எல். ஹரிசன்) நினைவுப்பேருரையாக வழங்கப்பட்டது. கரணவாய் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லையா யோகராஜா கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இளமானிப் பட்டத்தினையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

ஏனைய பதிவுகள்

Online poker Websites

Posts Mohegan Sunlight Internet casino Bonuses For Russian Casino players What is the Trusted Online casino For all of us People? Betmgm On-line casino Certain