கா.பொ.இரத்தினம். சென்னை 600004: பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், 2வது பதிப்பு, டிசம்பர் 2000, 1வது பதிப்பு, ஜுன் 1990.(சென்னை 600014: இரவிராஜ் ஆப்செட், 14, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை).
264 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12.5 சமீ.
1933ம் ஆண்டு தொடக்கம் 1990 வரையிலான காலப்பகுதியில் ஆசிரியர் நிகழ்த்திய பல்வேறு உரைகளுள் தேர்ந்த இருபத்தாறு உரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஆறு தலைமை உரைகளும், விரிவுரை, தொடக்கவுரை,வரவேற்புரை, வானொலியுரை, மதுரை மாநாட்டுரை, வாழ்த்துரை எனும் உரைவகைகள் ஒவ்வொன்றுக்கும் இவ்விரண்டு உரைகள் வீதம் சேர்க்கப்பட்டுள்ளன. ஏனைய சிறப்புரை, பாராட்டுரை, நினைவுரை, இரங்கலுரை, ஆராய்ச்சியுரை, கண்டனஉரை, திறனாய்வுரை, பாராளுமன்ற உரை எனும் எட்டு உரைவகைகள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உரையே கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் வித்துவான் கா.பொ.இரத்தினம் யாழ்ப்பாணத்தின் வேலணைத்தீவைச் சேர்ந்தவர். தமிழக அரசின் திரு வி.க.விருதினைப் பெற்றவர். கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் 12 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இலங்கை அரச கரும மொழித் திணைக்களத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராக ஆறாண்டுக்கும் மேல் பணியாற்றியவர். மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையின் விரிவுரையாளராகவும் சில காலம் பணியாற்றியவர். 1965 முதல் இலங்கைப் பாராளுமன்றத்தில் 18 ஆண்டுகள் உறுப்பினராக பதவிவகித்தவர்.