பொ.சண்முகநாதன். சுன்னாகம்: கலைச்செல்வி, புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1965. (அச்சுவேலி: சிவகுமாரன் அச்சகம்).
98 பக்கம், விலை: ருபா 1.50, அளவு: 18×12 சமீ.
கொழும்புப் பெண், கொழும்புப் பெண் வேண்டாம், சிறுகதை எழுதுங்கள், நாக்கு வளைக்கும் நல்லம்மா, கந்தர் புராணம், சோதிட வித்தகன் சொக்கலிங்கம், நாரதர் தூது, சினிமாப் பித்தன் செல்வராசன், றிப்போட் தயாரிப்பது எப்படி?, காலத்திற்கேற்ற கோலம் போடும் கந்தையர், இலவச ஆலோசகர்கள், கடவுள் அவதாரம் கனகம்மா, அஞ்சல் செல்வனுடன் பேட்டி, எழுதாத எழுத்தாளன் எழிலன், பாரதி இன்றிருந்தால்?, நான் படித்துக் கிழித்த கதை ஆகிய 16 நகைச்சுவைக் கட்டுரைகளினது தொகுப்பு இதுவாகும். சங்குவேலியைச் சேர்ந்த பொ.சண்முகநாதன் ஈழத்தின் நகைச்சுவை எழுத்தாளர்களின் குறிப்பிடத்தகுந்தவர். 1961இல் தனது முதலாவது நகைச்சுவைக் கட்டுரையை வீரகேசரியில் எழுதியவர். கலைச்செல்வி உள்ளிட்ட பல சிற்றிதழ்களிலும், பத்திரிகைகளிலும் இவரது பல கட்டுரைகள் பின்னாளில் இடம்பெற்றிருந்தன. 2003-2005 காலப்பகுதியில் உதயன் பத்திரிகையில் சண் அங்கிள் என்ற பெயரில் வாராந்தம் பத்தி எழுத்துக்களையும் எழுதிவந்தார். 2008இல் கலாபூஷணம் விருது பெற்ற இவர் அதே ஆண்டு வலிகாமம் தெற்கு பிரதேச கலாசாரப் பேரவையின் ஞான ஏந்தல் விருதினையும் பின்னர் 2009இல் சுன்னாகம் பிரதேச சபையின் பிரதேச இலக்கிய கர்த்தா கௌரவிப்பின்போது தமிழ்ச்சுடர் விருதினையும் பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 120835).