9526 குழந்தைக் கவி அமுதம்.

தர்மேந்திரா. யாழ்ப்பாணம்: தர்மா வெளியீடு, 28, கலைமகள் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, மார்ச் 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

xvi, 25 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 18×12.5 சமீ.

பாலகவியான ஆசிரியர் தன் 10 வயதில் ஐந்தாம் ஆண்டு மாணவனாக இருந்த வேளையில் பாடிய 40 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மாம்பழம், பாடசாலை, பறவை, நல்லூர்க் கந்தன் கோவில், அம்மா, உழவுத் தொழில், பசு, பூனை, வாழை, மலர், சைக்கிள் வண்டி, காகம், காலைப்பொழுது, சேவல், எருது, வீடு, இரவு, கமம், பந்து, வெண்ணிலா, பனை, என் துக்கம், மழை, பாட்டி, கல்வி கற்றிடுவோம், காற்று, பட்டம், முருகன், ஆகாய விமானம் என இவரது பாடல்களின் கருக்களும் தன் வயதுக்கேற்ற சிறுவரின் சிந்தனைப்போக்கிற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  81944). 

ஏனைய பதிவுகள்