9530 சிறுவர் செய்யுள்: பைபிள் கதைகள்.

பாவலவன். (இயற்பெயர்: பா.சத்தியசீலன்). யாழ்ப்பாணம்: பாக்ஸ் கிறிஸ்ரி, அமைதி அருள் மையம், 1வது பதிப்பு, 1991. (ஆனைக்கோட்டை:  மஞ்சரி பதிப்பகம்).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×14.5 சமீ.

இனிதாய் அமைந்தது எம் இறைவனின் படைப்பே, ஆதாம் இனிமேல் இப்பூமி அழகாய் இருக்காது உனக்கு, கனியும் நெஞ்சம் இல்லாமல் கனியைப் படைத்துப் பயன் என்ன, பெட்டகம் ஒன்றைச் செய் நோவா பிரளயம் ஒன்று வருகிறது, பழியால் கட்ட நினைத்திட்ட பாபெல் கோபுரம் ஆகிய ஐந்து தலைப்புகளின் கீழ் பைபிள் கதைகள் செய்யுள் உருவில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களுக்கேற்ற சந்தப் பிரிப்புடன் எளிய நடையில் பாவலவன் பா. சத்தியசீலன் இச்செய்யுள்களை இயற்றியுள்ளார். சிறுவர்களுக்கேற்ற எளிய நடையில், அந்த அதிசயமான பாத அணிகள், பன்றியாரை வென்றுவிட்ட பாட்டியம்மா, உயிர் காத்த ஓவியம், குழப்படியும் குளப்படியும் போன்ற சிறுவர்கதைகளை கவிதையுருவில்  இவர் ஆக்கியுள்ளார். இவற்றில் உயிர் காத்த ஓவியம் என்ற பாடல் ஒரு பாட்டுக்கூத்து உருவில் ஆக்கப்பட்டுள்ளது. கவிஞர் பா.சத்தியசீலன், ஆனைக்கோட்டை நவாலியைச் சேர்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  86548). 

ஏனைய பதிவுகள்

17879 தராக்கி-ஈழத்தமிழ் ஊடக முன்னோடி.

சண் தவராஜா, இ.தேவஅதிரன். சுவிட்சர்லாந்து: சிவராம் ஞாபகார்த்த மன்றம், இணை வெளியீடு, மட்டக்களப்பு: கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், 1வது பதிப்பு, 2023. (திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத்