9535 பாலர் பாட்டு தொகுதி 3.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, வைகாசி 1987, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 BA  தம்பி வீதி).

44 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 7.30, அளவு: 21.5×14 சமீ.

பிள்ளைகள் கண்டும் கேட்டும் பழகும் பூ, மழை, வண்டி, கப்பல், முதலிய பொருள் பற்றிய பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கதைப்பாடல் நான்கும், விடுகதைக் கவிதை ஒன்றும் இடம்பெற்றுள்ளன. ஆசிரியராகவும் அதிபராகவும் பல்லாண்டு காலம் பணியாற்றிய அனுபவத்தின் பயனாகப் பாலர்களின் உளவியல்புகளுக்கேற்ற பாடல்களை இந்நூலாசிரியர் வெகு அற்புதமாக இயற்றியுள்ளார். பாலர்களின் நிலையில் நின்று அவர்களே பாடும் வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்களில் இசையும் அசைவும் ஒன்றுகூடி வருவதால் ஆரம்பவகுப்பு மாணவர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 86988).

ஏனைய பதிவுகள்

16191 ஈழத்தமிழர் பண்பாட்டு ஆய்வுகள்.

சண்முகராஜா சிறிகாந்தன். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல.