9536 விரியும் மொட்டுக்கள்.

சு.வள்ளியம்மை (தொகுப்பாசிரியர்). சாவகச்சேரி: திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மை, வளர்பிறை, அமிர்தாம்பிகை வித்தியாலயம் அருகாமை, கண்டி வீதி, நுணாவில் கிழக்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (சாவகச்சேரி: நியு செந்தில் பிரின்டர்ஸ், கச்சாய் வீதி).

xi, 23 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×15 சமீ.

சிறுவர்களுக்கான புதிய பழைய பாடல்கள் நூலுருவிலும், அப்பாடல்கள் பதிவுசெய்யப்பட்டு ஒலிப்பேழை, இறுவெட்டுகளிலும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான பாடல்களை ஆசிரியர்கள் பாடிப்பயிற்சிபெற்றுக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் வகையில் வள்ளியம்மை ஆசிரியையினால் இம்முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறைவன் துதிப்பாடல், ஆண்டவர் திருத்தலம், கடவுள் ஒன்றே, சிறுவர் கீதம், வெள்ளைப் பூனைக்குட்டி, வண்ணக் கிளியே, உயிரெழுத்துக்கள், பைங்கிளி, கும்மியடித்திடுவோம், காலிலே பாதணி, விளையாட்டு முற்றம், அம்புலி மாமா, வட்ட நிலா, காட்டுக்குள்ளே காட்சியொன்று, பட்டம் பறக்குது, உயிரெழுத்தானவன், பாட்டுப்பாடுவேன், சின்னஞ்சிறிய சிறுவர், மழை பொழியுது, மத்தளம் நான் அடிப்பேன், நாம் ஊஞ்சல் ஆடுவோம், ஆடுவோம் பாடுவோம், பயிற்சி செய்வோம் நாம் ஆகிய 23 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.  பல்வேறு சிறுவர் பாடலாசிரியர்களால் இயற்றப்பட்ட இப்பாடல்களை திருமதி சு.வள்ளியம்மை  தொகுத்திருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  153178). 

ஏனைய பதிவுகள்

Content Bet Зеркало Официальный Сайт 1хбет Приветственный Пакет До 128 000 Рублей Всего Доступно Порядка 55 Вариантов Среди Них Популярные: Приложение 1xbet Для Ios И Андроид