9655 சாவித்திரி சரிதம்: பாட்டும் உரையும்.

வே.கனகசபாபதி. யாழ்ப்பாணம்: யாழ் இலக்கியவட்ட வெளியீடு, 1வது பதிப்பு, மாசி 1982. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).

xxviii, 359 பக்கம், தகடு, விலை: ரூபா 50., அளவு: 21×14.5 சமீ.

1966ம் ஆண்டு இரசிகமணி கனக செந்திநாதன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட யாழ் இலக்கிய வட்டத்தின் 28ஆவது பிரசுரம். வடமொழியில் வழங்கும் வியாச பாரதத்தில் வனபர்வத்தில் ஓர் உபகதையாகக் கூறப்பட்டுள்ள சாவித்திரி கதையை விரிவானதொரு காவியமாக்கியிருக்கிறார் புலவர் வே.கனகசபாபதி. சாவித்திரியின் கற்பின் மகிமையைப் பேசும் கதை இது. பஞ்சபாண்டவர் வனவாசம் செய்தபோது, யுதிஷ்டிரன் தங்கள் நிலைமையைக் குறித்துக் கவலையுடன் இருந்தவேளையில் மார்க்கண்டேய முனிவர் அவனுக்கு எப்படி சாவித்திரி தன் கற்பின் மகிமையால் சத்தியவானின் உயிரை மீளப்பெற்றாளோ அப்படியே திரௌபதியும் தனது கற்பின் மகிமையால் பாண்டவரின் துயரமெல்லாவற்றையும் நீக்கிச் சுகவாழ்வை உண்டாக்குவாளென்று ஆறுதல் கூறுவதற்காக சாவித்திரி கதையைச் சொல்வதாக வரலாறுண்டு.  பாயிரச் சருக்கம், உற்பத்திச் சருக்கம், சுயம்வரச் சருக்கம், திருக்கலியாணச் சருக்கம், மனையறச் சருக்கம், மறலிவரு சருக்கம், மீட்சிச் சருக்கம், துறவுச் சருக்கம், முடிசூட்டுச் சருக்கம் ஆகிய ஒன்பது சருக்கங்களைக் கொண்டுள்ள இக்காவியம் எழுநூற்றொரு விருத்தப்பாக்களால் ஆனது. நால்வகைப் பொருள்களையும் பல்வகை நயங்களும் பொலியக் கூறிச்செல்லும் இக்காவியத்தை இயற்றிய புலவர் கனகசபாபதி, யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 68889).

ஏனைய பதிவுகள்

Zorro Free Pokies

Posts Sun Vegas slot free spins: Zorro Pokie: Zero Download Review In a position for VSO Coins? Bucuresti Gambling establishment Bonus Codes 2024 Top Game