9788 ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள் சில.

கே.எஸ்.சிவகுமாரன். கொழும்பு 6: கே.எஸ்.சிவகுமாரன், 21, முருகன் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 1998. (கொழும்பு 13: செவ்வந்தி அச்சகம், 130, குணானந்த மாவத்தை).

vi, 154 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 20×13.5 சமீ.

பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுகளும் என்ற தொடரில் மூன்றாவது நூலாக இது வெளிவந்துள்ளது. 1980 இறுதிவரையிலுமான ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புக்கள் சிலவற்றின் மீதான ஆசிரியரின் திறனாய்வுப் பார்வையாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் 48 கட்டுரைகள்  இடம்பெற்றுள்ளன. தேனருவி, செய்தி, தினகரன் வாரமஞ்சரி, வீரகேசரி வார வெளியீடு போன்ற பத்திரிகைகளில் 1963 முதல் 1988 வரையிலுமான காலப்பகுதியில் இப்பத்தி எழுத்துக்கள் வெளிவந்திருந்தன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17387).

ஏனைய பதிவுகள்

11781 தீர்வு தேடும் நியாயங்கள்: சிறுகதைத் தொகுதி.

கண.மகேஸ்வரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). x, 94 பக்கம், விலை: ரூபா 250., அளவு: