9789 ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி.

க.அருணாசலம். கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(6), 86 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-659-301-3.

ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றி பேராசிரியர் க.அருணாசலம் எழுதிய  பின்வரும் ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூலாகும். ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி (1970-2000), புதுக்கவிதை: சில குறிப்புகள், புகலிடக் கவிதைகள்: சில குறிப்புகள், இ.முருகையனின் வெறியாட்டு (பாட்டுக்கூத்து): ஒரு சில குறிப்புகள், இ.சிவானந்தனின் கவிதைகள்: சில குறிப்புகள், தமிழோவியன் கவிதைகள்: சில குறிப்புகள், கவிதைச் சுடர் அன்பு முகையதீன் கவிதைகள்: ஒரு நோக்கு ஆகிய கட்டுரைகளே அவையாகும்.  க.அருணாசலம் தனது இளங்கலைமாணி, முதுமாணி, கலாநிதிப் பட்டங்களைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

10439 சிறுவர் நீதிக் கதைகள்: தொகுதி 1.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1B, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மே 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (2), 46 பக்கம்,