9797 காவிய மணம்.

கா.பொ.இரத்தினம். சென்னை: தமிழ்மறைப் பதிப்பகம், எச். 15/11, கலாஷேத்திரக் குடியிருப்பு, பெசன்ட் நகர், 1வது பதிப்பு, ஆனி 1990. (சென்னை 600086: சாலை அச்சகம், திருவீதியான் தெரு, கோபாலபுரம்).

(2), 182 பக்கம், விலை: இந்திய ரூபா 16., அளவு: 17.5×12.5 சமீ.

ஞாயிறு, செந்தமிழ், கதிரொளி முதலிய ஏடுகளில் வெளிவந்த தமிழ் இலக்கியக் கட்டுரைகளையும், இலங்கை வானொலியில் நிகழ்த்தப்பட்ட உரைகளையும், புதிய சில கட்டுரைகளையும் உள்ளடக்கி இந்நூல் வெளிவந்துள்ளது. காவிய மணம், கற்பனை விந்தை, பட்டினப் பாலை, பாரியும் மாரியும், நோயும் தீயும், ஐம்பெருங் காப்பியங்கள், முத்தொள்ளாயிரத்தில் மூன்று, கொடுமனக் கூனி, பாண்டிக் கோவை, வச்சத் தொள்ளாயிரத்தில் மிச்சம், பிரபந்தங்கள், அரைச் செய்யுள்கள், நாராய் நாராய், சொல்லடியே, கதிரைச் சிலேடை வெண்பா, பூமணக்கும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 கட்டுரைகள் இதில் அடங்குகின்றன. ஈழத்தவரான பேராசிரியர், முனைவர் கா.பொ.இரத்தினம், வேலணையைச் சேர்ந்தவர். 1952இல் தமிழ் மறைக் கழகத்தை நிறுவி அதன் ஆயுள் தலைவராக இருந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 100366).                                             

ஏனைய பதிவுகள்

Sizzling Hot Zabawa Darmowo Bez Zapisu

Content Producent Zabawy Hazardowej Sizzling Hot Przez internet Które Funkcje Bonusowe Mieszczą Rozrywki Jednoreki Rzezimieszek Hot Spot? Znaki, Jakie Warto Śledzić Zalety Rozrywki Sizzling Hot