9798 கிராமக் கவிதைவளமும் சிந்தனைக் கட்டுரைகளும்.

க.இ.சரவணமுத்து (புனைபெயர்: சாரதா). யாழ்ப்பாணம்: க.இ.சரவணமுத்து, 1வது பதிப்பு, கார்த்திகை 1993. (கொழும்பு 14: ஸ்ரார்லைன் பிரிண்டர்ஸ், 213 கிராண்ட்பாஸ் ரோட்).

xi, 140 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 21.5×14 சமீ.

கிராம ஊழியன் பத்திரிகையில் ஆரம்பித்து, ஈழகேசரிப் பண்ணையில் வளர்ச்சிபெற்ற சாரதா ஒரு மறுமலர்ச்சி எழுத்தாளர். இரட்டையர், மகேஸ்வரன் போன்ற வேறு புனைபெயர்களிலும் எழுதிவந்துள்ள இந்நூலாசிரியரின் நீண்டகால எழுத்துப் பணியின் ஓர் அறுவடையாக இக்கட்டுரைத் தொகுதி அமைகின்றது. கிராமக் கவிதைகள் (10), புதுமைத் தமிழ், இலக்கியமாவது யாது, இலக்கியக் கல்வி, கவியும் கற்பனையும், கற்பனையும் பாரதியும், புதிய ஆத்திசூடி, புரட்சிக் கவிதை, பாட்டுந் திருத்தமும், பகுத்தறிவாகுமா, பெண்களுக்கு ஆபரணம் தேவையா, தமிழுக்கு ரோமன்லிபி, விற்பதற்கோ கொள்வதற்கோ, தண்டனை, முத்தொள்ளாயிரக் காதல் (2), இலக்கிய நோக்கில் புலவர் வறுமை, எங்களுர் வைத்தியர்கள், மினக்கட்டான் வேம்பு, வைக்கற் பட்டடை நாய், சிந்தனைப் பட்டறை, பழமொழி இலக்கியம் ஆகிய 31 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 103280).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

Kasino Spiele Für nüsse

Content Spielautomaten Unter Fabrikant Entsprechend Kann Man Einen Slot Jammin Jars Sein glück versuchen? Höchster Triumph As part of Razor Shark Nachfolgende Besten Lucky Ladys