9807 தமிழ் யாத்திரை.

எ.எம்.எ.அஸீஸ். கொழும்பு: எ.எம்.எ.அஸீஸ், 1வது பதிப்பு, ஜனவரி 1968. (சென்னை 1: கமர்ஷியல் பிரின்டிங் அன்ட் பப்ளிஷிங் ஹவுஸ்).

(2), 200 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் கலந்துகொண்ட தமிழறிஞர் எ.எம்.எ.அஸீஸ் அவர்கள், பின்னர் தினகரன் பத்திரிகையில் தொடராக எழுதிவந்த   21 கட்டுரைகளின் தொகுப்பு. தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய பார்வைகளின் பதிவாகவும், நேர்முக வர்ணனையாகவும்  இவை அமைகின்றன. சமூக சேவைகளினாலும் சிந்தனையினாலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் பாடுபட்ட ஒருசில முஸ்லிம் தலைவர்களில் எ.எம்.எ.அஸீஸ் 20ம் நூற்றாண்டின் முக்கியமானவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 118854).

ஏனைய பதிவுகள்

11070 விஞ்ஞானமுறை: அளவையியலும் விஞ்ஞான முறையும் பாகம் 2.

எஸ்.எஸ்.மனோகரன். யாழ்ப்பாணம்: லொஜிக் வேவ்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், இல.11, குருசோ வீதி, சுண்டிக்குளி, 1வது பதிப்பு, ஜுலை 2014. (ஆனைக்கோட்டை:  ரூபன் அச்சகம்). 219 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×14.5 சமீ. அளவையியலும்

17995 சிவ வழிபாடு: சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள் (பட விளக்கத்துடன்).

கி.பழநியப்பனார். கொழும்பு 13: கொட்டாஞ்சேனை அருள்மிகு வரதராஜப் பிள்ளையார் கோவில் வெளியீடு, இல. 105, கொட்டாஞ்சேனைத் தெரு, 1வது பதிப்பு, மார்கழி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல் மாடி ரகிசா கட்டடம்,