9528 சந்தனப் பொட்டுச் சுந்தரம்பிள்ளை.

பா.சத்தியசீலன். மானிப்பாய்: ச.கலாதேவி, கலைவண்ணம், சின்னப்பா வீதி, நவாலி, 1வது பதிப்பு, டிசம்பர் 1979. (யாழ்ப்பாணம்: விக்னேஸ்வரா அச்சகம்).

12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.20, அளவு: 20.5×16.5 சமீ.

சிறுவர்களுக்கான வேடிக்கைக் கதைப்பாடல். ரமணி என அழைக்கப்படும் ஓவியர் வை.சிவசுப்பிரமணியத்தினதும், க.இராசரெத்தினம் அவர்களதும் கைவண்ணத்தில் அமைந்த சித்திரங்களுடன் வெளிவந்துள்ளது. நவாலியூர்க் கவிஞர் பண்டிதர் பா.சத்தியசீலன், ஈழத்துக் குழந்தைப் பாடல் இயற்றுவதில் தனக்கெனவொரு தனியான இடத்தை வகித்தவர். நகைச்சுவை உணர்வுமிக்கதும் குழந்தைகளின் சிந்தனை வெளிப்பாட்டுக்கு ஊக்கசக்தியாகவும் களமாகவும் அமையத்தக்க பல பாடல்களை எளிய நடையில் அமைத்து வழங்கியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 44593).  

ஏனைய பதிவுகள்