9654 காத்தவன் காவியம்.

தேவதாசன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணக் கத்தோலிக்க இலக்கியக் கழகம், 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

xviii, (2), 86 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

பாரத வித்து, ஈழத்தின் முத்து, இறைவனின் சொத்து ஆகிய மூன்று பாகங்களில் பாடப்பெற்றுள்ள காவியம் இதுவாகும். கவிஞர் தேவதாசன், பாஷையூரைச் சேர்ந்தவர். யாழ்.பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில், தொழிலாளர் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். கண்டிக் கச்சேரியில் பணியாற்றியவர். மாத்தளை இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர்.  மலையக மக்களின் துயரங்களைப் பாவடிவில் தந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 78029).

ஏனைய பதிவுகள்

Jlbet Online casino

Content Betrivers Gambling enterprise Make In initial deposit Find the Proper Game Playing Everygame: Finest Mobile Gambling establishment Experience in Ut Not just do the

17417 இரசித்த சினிமா.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 112 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 600.,