9717 ஆயுத எழுத்து: நாவல்.

சாத்திரி (இயற்பெயர்: கௌரிபால் சிறி). தமிழ்நாடு: திலீபன் பதிப்பகம், 1வது பதிப்பு, 2015. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).

392 பக்கம், விலை: இந்திய ரூபா 400., அளவு: 21.5×14 சமீ.

ஆயுத எழுத்து: நாவல்.

சாத்திரி (இயற்பெயர்: கௌரிபால் சிறி). சென்னை 600 092: புலம் வெளியீடு, 178 கு, அனுதீப் அபார்ட்மென்ட்ஸ், 3வது பிரதான சாலை, நடேசன் நகர், மீள் பதிப்பு, செப்டெம்பர் 2020. (சென்னை: ஸ்ரீதுர்கா பிரிண்ட்ஸ்).

392 பக்கம், விலை: இந்திய ரூபா 400., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-9078-859-5.

யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த கௌரிபால் சிறி, 1984ஆம் ஆண்டு தனது பாடசாலைப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டதன் மூலமாக ஈழ விடுதலைப் போரின் அங்கமானவர். 2001ஆம் ஆண்டுவரை பதினேழு வருடங்கள் அந்த அமைப்பின் பல பிரிவுகளிலும் உள்நாட்டு வெளிநாட்டு கட்டமைப்பிலும் பணியாற்றியுள்ளார். சாத்திரி என்கிற புனைபெயரில் பல வருடங்களாக தனது போராட்ட கால அனுபவங்களையும் சிறுகதைகளாகவும் கட்டுரைகளாகவும் தொடர்ச்சியாக ஒருபேப்பர் உள்ளிட்ட ஊடகங்களில் எழுதி வருகிறார். அவரது போராட்ட அனுபவங்களில் சில இங்கே ஆயுத எழுத்தாக நாவல் உருவில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக இலங்கையில் சுதந்திர தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அப்போராட்டத்தில் நேரடித் தொடர்புகொண்டிருந்த சாத்திரி தான் கண்டறிந்த, கேட்டறிந்த, பார்த்துணர்ந்த முக்கியமான பல சம்பவங்களை இந்நாவலில் பதிவுசெய்திருக்கிறார். 1983ம் ஆண்டுக் காலப்பகுதியில் தொடங்கும் இந்நாவலில் பெயரற்ற கதாநாயகனாகத் தன்னையே உருவகப்படுத்தி விடுதலைப் போராட்டம் சார்ந்த வாக்குமூலமாகச் சம்பவங்களைச் சொல்லியிருக்கிறார். புலம் வெளியீடாக 2020இல் வெளிவந்த பதிப்பும் முதலாவது பதிப்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Mustang Money Slot

Blogs Type of Slot machines From the Vegasslots Net Top 100 percent free Online casino games Development Your own Slot Game Approach How can Online