9721 ஒரு இல்லத்தில் சில உள்ளங்கள்.

ச.வாமதேவன். யாழ்ப்பாணம்: டேவிட் லிகோரி,  மீரா வெளியீடு, 38, வேம்படி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1992. (யாழ்ப்பாணம்: லக்ஷ்மி அச்சகம், 37 கண்டி வீதி).

(8), 100 பக்கம், விலை: ரூபா 55., அளவு: 19×13 சமீ.

யாழ்ப்பாணம் கொய்யாத் தோட்டத்தைச் சேர்ந்த ச.வாமதேவனின் முதலாவது நாவல் இதுவாகும். திக்கொன்றாகப் பறக்கும் சகோதரப் பறவைகளின் சோகராகமே இந்நாவல். துரை, தமிழ் வாமன், போன்ற புனைபெயர்களில் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதியவர் வாமதேவன். சுதந்திரன் பத்திரிகையில் இவரது பெரும்பான்மையான ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. அப்பத்திரிகையின் யாழ்ப்பாண நிருபராகவும் பணியாற்றியவர். நாடக உலகிலும் நடிகராக இருந்து அனுபவம் பெற்றவர். ஈச்சமோட்டை கதிரொளி நாடக மன்றத்தின் பல நாடகங்களிலும், வரணியூரானின் அசட்டு மாப்பிள்ளை நாடகத்தின் முக்கிய பாத்திரத்திலும் இவர் நடித்துள்ளார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  84947, 108132). 

ஏனைய பதிவுகள்

Free Spins Also provides 2019

Blogs Tips Earn On the Brief Hit Free Slot machine: Info Why Enjoy Lobstermania Slot machines Game? It is an enjoyable experience to play that

12641 – சேதனப் பசளைகள்.

S.T.திசாநாயக்க, ராஜகருணா தொலுவீர, சீரங்கன் பெரியசாமி. பேராதனை: விவசாயத் திணைக்களம், விவசாய காணி அமைச்சு, த.பெ.எண் 18, 1வது பதிப்பு, 2000. (பேராதனை: விவசாயத் திணைக்கள அச்சகம், கண்ணொறுவை). (2), 18 பக்கம், விளக்கப்படங்கள்,