9724 சாம்பவி.

செங்கைஆழியான். யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10 ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2003. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

108 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 19×14 சமீ.

மூன்று குறுநாவல்களின் தொகுப்பு. இத்தொகுப்பில் அடங்கியுள்ள ‘மீண்டும் ஒரு சீதை’, கலைமகள் அமரர்  ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது. ‘யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று’ கணையாழி அமரர் தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. சாம்பவி, கணையாழியில் இரு இதழ்களில் தொடராக வெளிவந்த குறுநாவல். மூன்றும் போர்க்கால அவலங்களிலே பிறந்தவை. சாம்பவி ஒரு பெண்போராளியின் கதை. தமிழீழவிடுதலைப் போராட்டம் தோற்றம்பெற நேர்ந்தமைக்கான காரணிகள் கலாரூபமாக விபரிக்கப்பட்டுள்ளது. 1956,1958,1974,1983களில் இடம்பெற்ற இனக்கலவர வன்செயல்கள் எவ்வாறு சாம்பவியைப் பாதித்தன என்றும் அவள் போராளியாக மாறநேர்ந்த காரணமும் இந்நாவலில் விபரிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தால் கைதுசெய்யப்படும் காதலியின் தூய்மை பற்றிச் சந்தேகிக்கும் காதலன் பற்றிய கதை மீண்டும் ஒரு சீதை. ஒரு கிராமம் தன் போர்க்கால அவலங்களைக் கூறுவதாக, யாழ்ப்பாணக் கொட்டடிக் கிராமத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135875).

ஏனைய பதிவுகள்

Totally free Buffalo Slot machine game

Content As to the reasons Enjoy Totally free Slots With no Download? Casino games No Deposit Bonuses Readily available Free Slots No Download Otherwise Registration

13850 புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்.

ஈழபாரதி (இயற்பெயர்: எட்வர்ட் ஜுட் நிக்சன்). திருச்சி 620003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (சென்னை: கப்பிட்டல் இம்பிரஷன்). 72 பக்கம், விலை: