9730 நான் நீதியின் பக்கம்.

க.அருள் சுப்பிரமணியம். மட்டக்களப்பு: உதயம் வெளியீடு, 65 லேடி மனிங் டிரைவ், 1வது பதிப்பு, நவம்பர் 1991. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியன் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்).

(2), 152 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 18×12.5 சமீ.

க.அருள் சுப்பிரமணியம் திருக்கோணமலையைச் சேர்ந்தவர். சிறந்த சிறுகதை, நாவல் இலக்கியவாதியான இவரது ஐந்தாவது நாவல் இது. அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்ற இவரது முதலாவது நாவல் 1974இல் சாகித்திய மண்டலப் பரிசுபெற்றது. நான் கெடமாட்டேன், அக்கரைகள் பச்சையில்லை ஆகிய நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்தன. சூரசம்ஹாரம் 1983இல் ஆனந்த விகடனில் 23 வாரங்கள் தொடராக வெளிவந்திருந்தது. தியாகங்கள் பாரமா என்ற இவரது முதலாவது சிறுகதை ‘மலர்’ சஞ்சிகையில் வெளிவந்திருந்தது. எட்டாவது உதயம் வெளியீடாக ‘நான் நீதியின் பக்கம்” வெளிவந்துள்ளது. வழமையான ஏழைகளின் சாதிய, சமூகப் பிரச்சினைகளைச் சுற்றி நகராமல்,  இந்நாவல் நடுத்தர- மேல்த்தட்டு வர்க்கத்தினரின் வாழ்க்கைப் பின்னணியில் நகர்கின்றது. மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பர வாழ்க்கை அதனால் ஏற்படும் சமுதாயப் பாதிப்புக்கள், அத்தகைய பாதிப்புக்கள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் என்பன பற்றியதாக இக்கதை நகர்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  120834). 

ஏனைய பதிவுகள்

16366 நாம் : முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம் : பொன்விழா சிறப்பு மலர் 1964-2014.

செ.அன்புராசா அடிகள், தமிழ்நேசன் அடிகள் (தொகுப்பாசிரியர்கள்). மன்னார்: முத்தமிழ்க் கலா மன்றம், முரங்கன், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5