சென்னை 4: கலைமகள் காரியாலயம், தபால் பெட்டி எண் 604, மயிலாப்பூர், 1வது பதிப்பு, நவம்பர் 1963. (திருவிடைமருதூர்: The Madras Law Journal Branch Press).
124 பக்கம், விலை: இந்திய ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ.
சோழர் படையெடுப்பால் தோல்வியுற்று பாண்டியநாட்டைவிட்டு வெளியேறி ஈழத்தில் தஞ்சமடைந்த சுந்தரபாண்டியன் 5ம் மிகுந்தனின் அமைச்சனாகிய கீர்த்தியின் மகள் மித்திரையின் காதலைப் பெறுகிறான். கரந்துறை வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்து இறுதியில் மித்திரையை மணந்து கௌரவம் பெறுகிறான். 10-11ம் நூற்றாண்டு தென்னிந்திய ஈழவரலாற்றுப் பின்னணியில் அமைந்த நாவல். 25 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. வீரம் விளையாடியது, அமைச்சர் புறப்பட்டார், பாசம் பிறந்தது, விடுதலை செய்யுங்கள், தணியாத காதல், அன்புக் கட்டளை, விலங்கு இறுகியது, ராசராசன் போர்முரசு, ஈழத்துப் படையெடுப்பு, ஜனநாதபுரம் எழுந்தது, ஓலை பறந்தது, தேவியின் காணிக்கை, திருவுருவ விழா, ஒற்றர்கள் சந்திப்பு, ஆறுதற் கரம், கதவு திறந்தது, திட்டம் பிறந்தது, முத்திரை மோதிரம், சிறையிலே கண்ணீர், சந்தேக நிழல், துன்ப முடிவு, படை புறப்பட்டது, உறுகுணை தப்பியது, விசாரணை மன்றம், பாசக் குரல் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் வீரகேசரி வாரமலரில் பிரதி ஞாயிறுதோறும் சரித்திரத் தொடர்கதையாக வெளியாகிய இது ஈழத்துப் புராதன நகரமான பொலன்னறுவையை கதைக்களனாகக் கொண்டது. நூலாசிரியர் மட்டக்களப்பு, குருமண்வெளியைச் சேர்ந்தவர்.