9735 பூவிதழில் புன்னகை.

ஜமுனாராணி நடராஜா. கொழும்பு 13: வே.நடராஜா, 57, பரமானந்த மாவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கொழும்பு 15: பிரஸ்டிஜ் பிரஸ், 660, அளுத்மாவத்தை வீதி).

xiv, 186 பக்கம், விலை: ரூபா 85., அளவு: 18×12 சமீ.

தனது இளம் பராயம் தொட்டு இலக்கிய ஈடுபாடுகொண்ட ஜமுனாராணி சிதம்பரப்பிள்ளை, திருமணத்தின் பின்னர் ஜமுனாராணி நடராசாவாகி தனது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தவர். தினபதி பத்திரிகையின் வார இதழான சிந்தாமணி இதழின் உதவி ஆசிரியையாகச் சிலகாலம் பணியாற்றியவர். இந்நாவல் ஜமுனாவின் முதலாவது நூலுருப்பெற்ற நாவலாகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 93471).

ஏனைய பதிவுகள்

16602 ஜீவபிரயத்தனம்: நாடகங்கள் ஏழு.

யோ.யோண்சன் ராஜ்குமார். யாழ்ப்பாணம்: கலைச்சோலை, நாவலர் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xiv, 196 பக்கம், விலை: ரூபா 400.,