9738 முப்பத்தேழாம் நம்பர் வீடு.

ஏ.ஸீ.ஜரீனா முஸ்தபா (புனைபெயர்: ஏ.சீ.கமருன் நிஸா). மாவனல்ல: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (மாவனல்ல: FAST Graphics, 31 ஜீ, ஹசன் மாவத்தை).

xx, 88 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1825-07-2.

முப்பத்தேழாம் நம்பர் வீடு.

ஏ.ஸீ.ஜரீனா முஸ்தபா (புனைபெயர்: ஏ.சீ.கமருன் நிஸா). கொழும்பு 9: ரீட் மோர் பப்ளிக்கேஷன், 82, ஸ்ரீ வஜிரானந்த மாவத்தை, 2வது பதிப்பு, பெப்ரவரி 2020, 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (கொழும்பு 14: I.P.C. Printers, 24B வாஸ் ஒழுங்கை, கிராண்ட்பாஸ்).

xx, 106 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-706-45-3.

ஒரு அபலையின் டயறி, இது ஒரு ராட்சஷியின் கதை, ரோஜாக் கூட்டம் ஆகிய நூல்களை எழுதி வழங்கியவர்  புறக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ.ஸீ.ஜரீனா முஸ்தபா. முஸ்லீம் சமூகம் சார்ந்த விழுமியங்களையும், இஸ்லாமிய பண்பாட்டையும், வழிநடத்தல்களையும் தனது நாவல்களில் தீவிரமாகப் புகுத்தும் ஏ.ஸீ.ஜரீனா முஸ்தபாவின் மற்றுமொரு நாவல் இதுவாகும். பில்லி சூனியத்துக்காகத் தன் பணத்தையும் ஈமானையும் (இறை நம்பிக்கை) இழந்தவர்களின் கதை இது. 1985இல் ஒரு முடிவில் ஓர் ஆரம்பம் என்ற நாடகப் பிரதியொன்றை இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவைக்கு எழுதியதன்மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் ஏ.ஸீ.ஜரீனா முஸ்தபா. ஏ.சீ.கமருன் நிசா என்ற புனைபெயருள் மறைந்திருந்து வானொலி, முஸ்லிம் சேவையிலும், தினகரன், சிந்தாமணி, மித்திரன் போன்ற பத்திரிகைகளிலும் இவரது படைப்புகள் சிறுகதை, நாவல், கவிதை கட்டுரை வடிவில் வெளியாகியுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 226917).

ஏனைய பதிவுகள்