9772 தமிழ் இலக்கிய வரலாறு.

பாலசிங்கம் பாலகணேசன். கல்வியங்காடு: கக்ஸ்ரொன் பிரின்டேர்ஸ், 1/1, பருத்தித்துறை வீதி, நல்லூர் சந்தைக் கட்டிடம் (மேல்மாடி), 1வது பதிப்பு, 2012. (கல்வியங்காடு: கக்ஸ்ரொன் பிரின்டேர்ஸ், 1/1, பருத்தித்துறை வீதி).

x, 126 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14 சமீ.

தமிழ் இலக்கிய வரலாற்றை பொதுவாகவும், ஈழத்து இலக்கிய வரலாற்றினைக் குறிப்பாகவும் ஆய்வுசெய்யும் இந்நூல் பன்னிரு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாறு அறிமுகம், சங்க காலம் (தொன்மை முதல் கி.பி.250 ஆண்டுகள் வரை), சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர்கால இலக்கியங்களும் அவற்றின் போக்குகளும், ஐரோப்பியர் காலம், ஆகிய ஏழு அத்தியாயங்களும் தமிழ் இலக்கியத்தை பொதுவாகத் தரிசிக்கின்றன. யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்ட காலம், ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் அல்லது யாழ்ப்பாணத்தரசர் காலம் (கி.பி.1216-1621), போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம் ஆகிய ஐந்து அத்தியாயங்களும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வு செய்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234585).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்