9808 தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா?.

வி.ரி.இளங்கோவன்.  சென்னை600109: யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, மே 2012. (சென்னை 49: ஜெமினி ஓப்செட் பிரின்டர்ஸ், வில்லிவாக்கம்).

70 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-922530-2-2.

புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் இளங்கோவன், தாயகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்தவர். இந்நூலில் பாரம்பரிய மருத்துவம் பற்றி இவரால் அவ்வப்போது எழுதப்பெற்ற 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உடல்நலம் காக்கும் பாரம்பரிய மருத்துவம், நமது நலம் பேணுவதற்கு நம் முன்னோர் வழங்கிய செல்வம் சுதேச வைத்தியம், மக்கள் வழக்கில் மருத்துவப் பழமொழிகள், ஆடம்பரக் குதூகலங்கள் அவசியமானவையா? முருங்கை வளர்த்து முழுப்பயன் பெறுங்கள், உணவில் கறிவேப்பிலை சேருங்கள், மருத்துவப் பயன் நிறைந்த துளசி, ஆரோக்கியமற்ற சமூகத்தால் ஒரு புதிய சமுதாயத்தை படைத்திட முடியாது, புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள், தேனின் மகத்துவம், இன்றைய இளைஞர்களும் போதைவஸ்துக்களும், சித்தர்களில் சிறந்த சிவவாக்கியர், தாய்ப்பால் கொடுக்கத் தவறாதீர், பாலர் உளநலம் பேணுங்கள், நிறைந்த பயன்தரும் நெல்லிக்காய், நீரிழிவா? வயிற்றோட்டத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், பிலிப்பைன்சில் மூலிகை வைத்தியம்-எம்மவர் சேவைக்குப் பாராட்டு ஆகிய தலைப்புகளில் அமைந்த இக்கட்டுரைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்தவையாகும்.

ஏனைய பதிவுகள்