9812 நல்லை நாவலன் கோவை.

கந்த முருகேசன் (மூலம்), மு.கந்தையா, வ.சிவராஜசிங்கம் (உரையாசிரியர்கள்). புலோலி:  எஸ். ஏகாம்பரநாதன், புலோலி தெற்கு, 1வது பதிப்பு, ஜுலை 1999. (கொழும்பு 12: பேஜ் செட்டர்ஸ், மெசெஞ்சர் வீதி).

ix, 357 பக்கம், 2 புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

ஈழத்துப் பெரியார் (தமிழ்த் தாத்தா) தென்புலோலியூர் கந்தமுருகேசனார்  ஆறுமுக நாவலர் மீது பாடிய கோவை ப்பிரபந்தம் இதுவாகும். இலக்கிய கலாநிதி பண்டிதர் மு.கந்தையாவும் பிள்ளைக்கவி வ.சிவராஜசிங்கமும் இணைந்து கந்தமுருகேசனாரின் கோவைக்கு உரையெழுதியுள்ளனர். கந்தமுருகேசனார் சைவத்தின் மீது ஆரம்பத்தில் பற்றுறுதி கொண்டிருந்த வேளையில் நாவலர் மீதும் ஆர்வம்கொண்டு அவர் பற்றிய தேடலில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையிலேயே  இவ் வாழ்ந்தகன்ற கோவையைப் பாடும் ஆர்வம் அவருக்கேற்பட்டது.  பின்னாளில்  மத நம்பிக்கையற்றிருந்த வேளையிலும், நாவலர் தம் பண்புகளால் ஈர்க்கப்பெற்றவராகவே கந்தமுருகேசனார்  இருந்துள்ளார். அதன் வெளிப்பாடாகவே நல்லை நாவலன் கோவை சாத்தியமாயிற்று. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  127948). 

ஏனைய பதிவுகள்

9729 நான் உன்னைத் தேடுகிறேன்.

மொழிவாணன். கொழும்பு: நீரஜா பப்ளிக்கேஷன்ஸ், 248/83, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு: மொடர்ன் அச்சகம், 192, செட்டியார் தெரு). 62 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5 சமீ. மர்மக்